சென்னை மழையில் தவியாய் தவிக்கும் மக்கள் | Chennai Rain | Rain Alert
சென்னை ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை மாரிமுத்து தெருவில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் சமையல் செய்ய முடியவில்லை. இதுவரை உணவு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு மழையின் போதும் இதே நிலை தான் இருந்தது என அப்பகுதி மக்கள் கூறினர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்கள் மூலம் அள்ளி வெளியே ஊற்றினர்.
அக் 16, 2024