தமிழகம் நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி | Chennai Rain | Rain Alert | Rain News
தென்மேற்கு வங்க கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. அதே நேரம் இரவு முழுதும் கனமழை பெய்தும் சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் எங்குமே தண்ணீர் தேங்கவில்லை என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இப்போதும் மழை தொடர்வதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். தொடர் மழை காரணமாக சென்னையில் இருந்து டெல்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 30 முதல் 45 நிமிடங்கள் தாமதமாகவும், ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் 30 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்பட்டது.