எங்கிருந்தது வந்தது இவ்வளோ பணம்? | ED | Chennai ED Raid
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு குமாரராஜிபேட்டை காலனியை சேர்ந்தவர் தமிழரசன், வயது 25. அதே கிராமத்தை சேர்ந்த இவரது நண்பர்களான அரவிந்தன், பிரகாஷ் உட்பட 5 பேர் சோளிங்கரில் உள்ள ஆலையில் வேலை பார்த்து வந்தனர். கடந்த மாதம் தமிழரசன் உள்பட 5 பேரும் திடீரென வேலையைவிட்டு நின்றுவிட்டனர். இதை தொடர்ந்து 5 பேரின் வங்கி கணக்கிலும் ஆன்லைன் மூலமாக 2 கோடிக்கும் மேல் பண பரிமாற்றம் நடந்துள்ளது. அதில் ஒன்றரை கோடிக்கும் மேல் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
செப் 13, 2024