ஸ்டாலின் பாராட்டு விழாவுக்கு சென்ற ஆசிரியர்களுக்கு சோகம் |Chennai road accident|Teachers accident
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2715 புதிய ஆசிரியர்களுக்கான பயிற்சியினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆசிரியர்கள் வந்திருந்தனர். அந்த வகையில் இன்று அதிகாலை விழுப்புரத்தில் இருந்து 8 ஆசிரியர்கள் ஒரே காரில் சென்னை நோக்கி கிளம்பினர். சாகுல் ஹமீது என்பவர் காரை ஓட்டி சென்றார். அப்போது இன்னொரு இடத்துக்கு செல்ல அய்யூர் அகரம் அருகே ஹைவேஸில் கார் தவறான பாதையில் சென்றதாக தெரிகிறது. அதே நேரம் எதிரே சென்னையில் இருந்து டால்மியாபுரம் நோக்கி வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் இழுத்து செல்லப்பட்ட கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் கார் ஓட்டி சென்ற சாகுல் ஹமீது, ஆசிரியை சிவரஞ்சனி ஸ்தபாட்டிலேயே உடல் நசுங்கி இறந்தனர். காரில் பயணித்த ஆசிரியர்கள் மகரினிஷா, கெளசல்யா, மலர்விழி,சூர்யா காயங்கங்களுடன் உயிர் தப்பினர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர்.