ஆள் வருவதே தெரியாத அளவுக்கு கடும் பனி மூட்டம் | Chennai snowfall | Weather | heavy snowfall
விடிந்தும் சென்னையை மொத்தமாக மூடிய பனி! சாலை, ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு சென்னையில் இன்று அதிகாலை வழக்கத்தைவிட கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பெருங்களத்தூர், தாம்பரம், பொன்னேரி மற்றும் புறநகர் என பல பகுதிகளில் எதிரில் வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு சாலையில் மூடுபனி உள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் மற்றும் பார்க்கிங் விளக்குகளை போட்டபடி கடந்து செல்கின்றனர். பனி மூட்டம் காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் சேவையில் தாமதமாகி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ரயில்கள் ஆரன் எழுப்பி முகப்பு விளக்கு எரிய விட்டபடி செல்கிறது. மோசமான வானிலை காரணமாக சென்னை ஏர்போட்டில் விமானம் தரையிறங்கவும் தாமதம் ஏற்பட்டு வானிலேயே வட்டமடிக்கின்றன.