உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை நோக்கி படையெடுத்த கார்களால் அதிர்ச்சி | chennai traffic jam | perungalathur traffic jam

சென்னை நோக்கி படையெடுத்த கார்களால் அதிர்ச்சி | chennai traffic jam | perungalathur traffic jam

மாட்டிக்கிச்சே... மாட்டிக்கிச்சே... ஒரே நேரத்தில் இவ்ளோ காரா! அலறிய சென்னை ரோடு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் நேற்று மாலை முதல் சென்னை திரும்ப துவங்கினர். தென் மாவட்டங்களில் இருந்தும் இதர பகுதிகளில் இருந்தும் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி வாகனங்கள் படை எடுத்தன. சென்னை புறநகர் பகுதியில் ஒரே நேரத்தில் வாகனங்கள் வந்ததால் நள்ளிரவு முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம் பெருங்களத்தூர் வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கார்கள் தான் அதிகம். சென்னை நோக்கி செல்லும் சாலை முழுக்க வாகனங்களால் நிரம்பி இருந்த அதே நேரத்தில் எதிர் திசையில் சென்னையிலிருந்து வெளியே செல்லும் ரோட்டில் ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டுமே சென்றன.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை