ஒரே நேரத்தில் படையெடுக்கும் லட்சக்கணக்கான மக்கள் | Chennai | Traffic Police
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு கிளம்பியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் டூவீலர், கார்களில் வருவதால் பரனூர் டோல்கேட், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பெருங்களத்தூர், தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. பெருங்களத்தூர்,வண்டலூர், கிளாம்பாக்கம் இடையே 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றது. போக்குவரத்து போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் சீர் செய்யப்பட்டது.
நவ 03, 2024