/ தினமலர் டிவி
/ பொது
/ மோடியால் உயிர்பெறும் சென்னை - விளாடிவோஸ்டாக் வழித்தடம் | Chennai-Vladivostok
மோடியால் உயிர்பெறும் சென்னை - விளாடிவோஸ்டாக் வழித்தடம் | Chennai-Vladivostok
இந்தியா, ரஷ்யா இடையிலான 22வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடக்கிறது. மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின் இது அவரது முதல் பயணமாகும். கடைசியாக 2019ல் மோடி ரஷ்யா சென்றிருந்தார். மோடியின் ரஷ்ய பயணத்தில் சென்னை- விளாடிவோஸ்டாக் கடல்வழி சரக்கு போக்குவரத்து வழித்தடத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேற்கு ஆசியாவில் பதற்றமான போர் சூழல் நிலவி வருகிறது. சரக்கு கப்பல் மீது பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் சர்வதேச வர்த்தகத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் சென்னை - விளாடிவோஸ்டாக் வழித்தடத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஜூலை 09, 2024