கிளாம்பாக்கம் பஸ் நிலைய நடைமேம்பாலத்தில் குறைபாடு | Chennai | Kilambakkam skywalk foot over bridge
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதாக சொல்லி, கோயம்பேடு பஸ் நிலையத்தை கிளாம்பாக்கத்துக்கு மாற்றினார்கள். 2023ல் பஸ் நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பிரச்னைதான். இதனால், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்கள் படாதபாடு பட்டார்கள். கிளாம்பாக்கம் வரை பஸ்சில் செல்ல வேண்டியிருந்தது. கடுமையாக அவதிப்பட்டார்கள். அதன்பிறகே, அவசர அவசரமாக கிளாம்பாக்கத்தில் ஒரு ரயில் நிலையத்தை அமைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி சாலையை கடப்பதற்கும், புதிதாக அமைக்கப்படும் ரயில் நிலையத்துக்கு மக்கள் நடந்து செல்லும் வகையிலும் நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.