சென்னை ஏர்போர்ட்டில் பள்ளி மாணவர்கள் சேட்டை! | Chennai Airport police | Airport police | hoax bomb
சென்னை ஏர்போர்ட்டுக்கு புதன் மதியம் ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய நபர், ஏர்போர்ட் பாத்ரூமில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளது. சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என கூறி விட்டு கால் கட் ஆனது. அதிகாரிகள் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சென்னை ஏர்போர்ட்டில் இன்ச் இன்ச்சாக சோதனை நடந்தது. வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படாததால் தகவல் வழக்கம் போல போலி என்பது தெரிந்தது. சென்னை ஏர்போர்ட்டுக்கு சமீபமாக இமெயிலில் இது போன்ற மிரட்டல் வந்த நிலையில் இந்த முறை போன் காலில் வந்து இருந்தது. ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். போன் வந்த செல்போன் எண்ணை டிராக் செய்தனர்.