உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையை உலுக்கிய சிலிண்டர் வெடிப்பு-பகீர் காட்சி chennai bio gas blast cctv | chennai corporation

சென்னையை உலுக்கிய சிலிண்டர் வெடிப்பு-பகீர் காட்சி chennai bio gas blast cctv | chennai corporation

சென்னை மணலி பல்ஜி பாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ காஸ் தயாரிப்பு கூடம் உள்ளது. மாநகராட்சியின் 5 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளில், திடக்கழிவுகளை பிரித்து அதில் இருந்து பயோ காஸ் தயாரிக்கும் வேலை இங்கு நடக்கிறது. நேற்று சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஆப்ரேட்டர்கள் பாஸ்கரன், சரவண குமார் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இரவு 10 மணிக்கு மெஷினை ஷட்டவுன் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென காஸ் டேங் வெடித்து சிதறியது. இதில் காஸ் தயாரிப்பு செட் இடிந்து விழுந்தது. பொருட்கள் தீப்பற்றின. சுவர் விழுந்ததில் உடல் நசுங்கி சரவண குமார் இறந்தார்.

பிப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ