/ தினமலர் டிவி
/ பொது
/ புதுச்சேரியில் மேக வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு! | Chennai cloud burst | Puducherry govt
புதுச்சேரியில் மேக வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு! | Chennai cloud burst | Puducherry govt
சென்னையில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. புறநகர் பகுதியான மணலியில் மட்டும் 27 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. ஒரே இரவில் இவ்வளவு மழை பெய்ததற்கு மேக வெடிப்பே காரணம் என தெரிந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை தொடர்ந்து புதுச்சேரியிலும் மேக வெடிப்பு ஏற்பட்டால் பாதிப்பை சமாளிக்க மாநில வருவாய் பேரிடர் மேலாண்மை துறை முன் எச்சரிக்கையாக தயாராகி வருகிறது.
ஆக 31, 2025