உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தந்தை துடிப்பதை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த கொடூரம் | | Father Murdered by Son | Chennai

தந்தை துடிப்பதை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த கொடூரம் | | Father Murdered by Son | Chennai

0350. Ed. by SSE vignesh இரும்பு ராடால் ஒரே போடு தந்தைக்கு எமன் ஆன மகன்! டிஸ்க்: தந்தை துடிப்பதை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த கொடூரம் | | Father Murdered by Son | Chennai ராஜஸ்தானை சேர்ந்தவர் ஜெகதீஷ் சங்கர்லால். சென்னை சென்ட்ரல் அருகே எழு கிணறு பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் ரோகித். தந்தையுடன் சேர்ந்து மிட்டாய் கடை நடத்தி வருகிறார். தந்தை மகன் இடையே இன்று திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. ஆத்திரமடைந்த ரோஹித் இரும்பு ராடால் தந்தை ஜெகதீஷ் தலையில் ஓங்கி அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். தந்தை உயிருக்கு போராடும் வீடியோவை எடுத்து உறவினருக்கு அனுப்பினான். பின்னர் ராஜஸ்தானுக்கு தப்பியோட சென்டலுக்கு சென்றான் ரோஹித். ரயில்வே போலீஸ் உதவியுடன் அவனை ஏழு கிணறு போலீசார் மடக்கி பிடித்தனர். தந்தை ஜெகதீஷ் தனது தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் துன்புறுத்தியதாகவும், அந்த ஆத்திரத்தில் தான் தந்தையை அடித்து கொன்றதாகவும் போலீசில் ரோஹித் வாக்குமூலம் அளித்தான். ரோஹித் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டான். Cni

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ