உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் கனமழை: கடும் சூறாவளியால் விமான சேவை பாதிப்பு

சென்னையில் கனமழை: கடும் சூறாவளியால் விமான சேவை பாதிப்பு

#ChennaiRain #HeavyRain #FlightCancelled #AirportRain #TNRain #Indigoflight #HeavyRain சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கோயம்பேடு, மதுரவாயல், வானகரம்,நெற்குன்றம்,ராமாபுரம், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்தது. கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால், பல இடங்களில் கடைகளின் பெயர் பலகைகள் காற்றில் பறந்தன. ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால், போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில், மாலை 4 மணிக்கு சூறைக்காற்றுடன் துவங்கிய கனமழையால், சென்னையில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஜூன் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை