உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போடாத ரோடுக்கு போட்டாச்சுன்னு மெசேஜ் வருது: இது சென்னை பேக்கேஜ் | ChennaiRoadDamage

போடாத ரோடுக்கு போட்டாச்சுன்னு மெசேஜ் வருது: இது சென்னை பேக்கேஜ் | ChennaiRoadDamage

சென்னை, திருவொற்றியூர், மணலி பெரியார் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் முறையான ரோடு வசதி இல்லை. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. திங்களன்று இரவு பெய்த சிறிய மழைக்கே அப்பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு குண்டும் குழியுமாக மாறியது. சேறும், சகதியமாக கிடப்பதால் வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் ரோடு போட்டு தர வேண்டும் என கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் வழியில் கட்டைகள் வைத்து மறியல் செய்தனர். சேற்றில் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

செப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை