சென்னை நெரிசல் சம்பவத்துக்கு அரசின் கவனக்குறைவே காரணம் | Aadhav Arjuna | DPI | Chennai traffic | Air
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமானப்படையின் சாகச நிகழ்ச்சிக்கு வந்த 5 பேர் நெரிசலில் சிக்கி பலியானார்கள். இதற்கு திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கண்டனம் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் வான்படை சாகச கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டோர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கவனிக்க முடக்கிவிடவில்லை.