ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் ஜாம்: ஊர்ந்து செல்லும் வாகனங்கள் | Chennai Traffic jam GST road Chromepet
சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட சென்னைவாழ் மக்கள் புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கார்களில் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால், சென்னை பல்லாவரம் முதல் தாம்பரம் வரை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குரோம்பேட்டையில் சரவணா, போத்தீஸ், சென்னை சில்க்ஸ், மேக்ஸ், ட்ரெண்ட்ஸ் உள்ளிட்ட பல பெரிய ஜவுளி நிறுவனங்கள், லலிதா ஜுவல்லரி, கல்யாண் ஜுவல்லர்ஸ், தனிஷ்க் போன்ற நகைக்கடைகள் இருப்பதால் ஷாப்பிங் செல்பவர்களும் ஆயிரக்கணக்கில் வாகனங்களில் வருகின்றனர். இதனால் குரோம்பேட்டையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.