உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவரைப்பேட்டை ரயில் விபத்தில் சதி நடந்ததா?

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் சதி நடந்ததா?

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், கடந்த 11ம் தேதி பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. மெயின் லைனில் சிக்னல் தரப்பட்டு இருந்த நிலையில், லூப் லைனில் புகுந்த பாக்மதி எக்ஸ்பிரஸ், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு ரயில் மீது மோதியது. 12 பெட்டிகள் தடம் புரண்டன. 19 பேர் படுகாயமடைந்தனர். உயிர்பலி இல்லை. விபத்து தொடர்பாக தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம் சவுத்ரி விசாரணை நடத்தினார். அதிகாரிகள் ஊழியர்கள் உட்பட 30க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது. குறிப்பாக சிக்னல் இன்டர்லாக்கிங் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டது.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை