சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கி குடும்பமே இறந்த சோகம் | Chhattisgarh flood | Tirupathur family died |
திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், வயது 45. கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கரில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டம், ஜகல்பூரில் 38 வயது மனைவி பவித்ரா, 8 வயது மகள் சவுத்தியா, 6 வயது மகள் சவுமிகா ஆகியோருடன் குடும்பமாக வசித்து வந்துள்ளார். திருப்பதி கோயிலில் நடைபெற இருந்த திருமணத்தில் பங்கேற்க ராஜேஷ்குமார், மனைவி மகள்களுடன் காரில் சொந்த ஊர் புறப்பட்டார். சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக மழை வெள்ளத்தில் சிக்கிய ராஜேஷ் கார் நீரில் அடித்துச் சென்றுள்ளது. நீரில் மூழ்கி காருக்குள் இருந்த நான்கு பேரும் பரிதாபமாக இறந்தனர். கரை ஒதுங்கிய காரில் இருந்து 4 பேர் உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து 4 பேர் உடல்களையும் 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ChhattisgarhFlood #TirupathurFamily #CarCaughtInFlood #FloodDisaster #NaturalCalamity #FamilyTragedy #RescueOperations #FloodSafety #ClimateCrisis #WaterloggedRoads #EmergencyResponse #LocalNews #ChhattisgarhNews #SadNews #CommunitySupport #FloodRelief #TragicIncident #CarAccident #HumansOfChhattisgarh #PreventFloods