உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்தடுத்த மரணங்களால் கொந்தளித்த பழங்குடி மக்கள் 9 persons dies crime witchcraft black magic

அடுத்தடுத்த மரணங்களால் கொந்தளித்த பழங்குடி மக்கள் 9 persons dies crime witchcraft black magic

சத்தீஸ்கரில் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டம். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டம் மட்டுமல்ல, நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதியாகும். இங்குள்ள எட்கல் Etkal கிராமத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். மந்திரீகம் செய்வது, பில்லி சூனியம் வைப்பதை எல்லாம் இன்னும் இங்குள்ள பழங்குடி மக்கள் முழுமையாக நம்பி கொண்டிருப்பதுதான் இந்த பயங்கரத்துக்கு காரணம். இட்கல் கிராமத்தில் கடந்த இரு வாரங்களில் சிலர் திடீரென இறந்தனர். அவர்கள் வயதானவர்கள் மற்றும் சின்னக்குழந்தைகள். அடுத்தடுத்து சாவுகள் நடந்ததால் ஊர் மக்கள் அதே ஊரைச் சேர்ந்த சாமியாரிடம் போய் பரிகாரம் கேட்டனர். அதே ஊரில் வசித்து வந்த மவுசம் கன்னா (60) Mausam Kanna என்பவர் வீட்டில் மாந்திரீகம் செய்கிறார்கள்; அதுதான் திடீர் சாவுகளுக்கு காரணம் என சாமியார் சொல்ல, கிராம மக்கள் கொந்தளித்து எழுந்தனர். ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்து முன்னிலையில் மவுசம் கன்னா, அவர் மனைவி மவுசம் பிரி, மகன் மவுசம் புச்சா 34, மருமகள் மவுசம் அர்ஜோ 32 ஆகியோர் நிறுத்தப்பட்டனர். அவர்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்த உறவினர் கர்கா லச்சி 43 என்ற பெண்ணையும் பலவந்தமாக பிடித்து வந்து பஞ்சாயத்தில் நிறுத்தினர். இந்த ஊரில் சாவு விழுந்து கொண்டே இருக்கிறது; நீங்கள் மாந்திரீகம் செய்வதுதான் காரணம் என எங்களுக்கு தெரிந்து விட்டது; உங்களுக்கு தண்டனை வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என ஊர் மக்கள் கூறினர். உடனே மவுசம் புச்சாவுக்கு கோபம் வந்தது.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை