உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடுரோட்டுக்கு வந்த மக்கள்: நள்ளிரவில் பரபரப்பு | Chidambaram | Protest

நடுரோட்டுக்கு வந்த மக்கள்: நள்ளிரவில் பரபரப்பு | Chidambaram | Protest

சிதம்பரம் பரமேஸ்வர நல்லூரில் கட்டுமான தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. 67 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் இங்கு குடிசை வீடுகளே இருந்தது. கருணாநிதி ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டது. அரசு நிதியில் தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டது. இங்குள்ள மக்கள் கட்டுமானம் மற்றும் கூலி வேலைகளுக்கு செல்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா நிலத்தில் வசித்து வரும் நிலையில் திடீரென வருவாய் துறையினர் அதனை நீர்நிலை புறம்போக்கு நிலம் என கூறியுள்ளனர். உடனே வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 60க்கும் மேற்பட்டோர் இரவோடு இரவாக சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் முன் குவிந்தனர். தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

பிப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை