உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்த உத்தரவை வெளியிட்ட தலைமை செயலர் | Chief Secretary | Tamil Nadu | Transfers | IAS | officers

அடுத்த உத்தரவை வெளியிட்ட தலைமை செயலர் | Chief Secretary | Tamil Nadu | Transfers | IAS | officers

ஆம்ஸ்ட்ராங் சம்பவத்துக்கு பின் தொடரும் தமிழக அரசின் அதிரடி நிர்வாக காரணங்களுக்காக அரசு துறை உயர் அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும் தொடர்ச்சியாக அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர். அதிலும் சமீபத்தில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் உள்துறை செயலராக இருந்த அமுதா, சென்னை மாநகர கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி கமிஷனராக இருந்த ஷேக் அப்துல் ரகுமான், நகராட்சி நிர்வாக இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வளர்ச்சி வாரிய சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி துர்கா மூர்த்தி, வணிக வரி இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் கலெக்டர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலராகவும், தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, அருங்காட்சியகங்களின் இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர். பவர்பின் நிறுவன நிர்வாக இயக்குநர் அம்பலவாணன், தொழில் முனைவோர் வளர்ச்சி நிறுவன இயக்குநராகவும், நிதி துறை இணை செயலாளர் கிருஷ்ணன் உன்னி, கணக்கு மற்றும் கருவூல துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி