உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடத்தல் பெண்ணை காட்டிக்கொடுத்த சிசிடிவி

கடத்தல் பெண்ணை காட்டிக்கொடுத்த சிசிடிவி

சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் அரோக்கியதாஸ்-நிஷாந்தி தம்பதி. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று, இவர்களது வீட்டுக்கு வந்த தீபா என்ற பெண் வந்தார். ஆண் குழந்தைகளுக்காக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை வங்கி தருவதாக கூறி இருக்கிறார். இதை நம்பிய நிஷாந்தி, குழந்தையை தூக்கிகொண்டு அந்த பெண்ணுடன் சென்னை தியாகராய நகருக்கு சென்றார். அங்குள்ள ஓட்டலில் இருவரும் உணவு சாப்பிட்டனர். நிஷாந்தி கைகழுவ சென்றபோது, தீபா, நைசாக குழந்தையை தூக்கிக்கொண்டு மாயமானார். குழந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந்த நிஷாந்தி, கதறி அழுதார். கண்ணகிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆராய்ந்தனர். அந்த பெண் துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி, குழந்தையுடன் ஆட்டோவில் சென்றது தெரிந்தது. ஆட்டோ பதிவு எண்ணை வைத்து, அவர் எங்கே இறங்கினார் என்பதன் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர்.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை