உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தென் மாநிலங்களில் குழந்தை திருமணம் அதிகம் Child marriage| TN Tops on Child marriage| Southern state

தென் மாநிலங்களில் குழந்தை திருமணம் அதிகம் Child marriage| TN Tops on Child marriage| Southern state

ஒரு காலத்தில், ராஜஸ்தான், பீகார், உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடந்தன. அந்த பட்டியலில் தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் முன்னிலை வகிக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. குழந்தை திருமணங்களுக்கு காரணமாக இருப்பவர்கள் மீது மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறி, தனியார் தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரிக்கிறது. நாட்டில் கடந்த மூன்று ஆண்டுளில் நடந்த குழந்தை திருமணங்கள் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ