/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சி, பெங்களூரில் சீனாக்காரர்கள் கந்து வட்டி தொழில் | China | NIA investigation | Trichy
திருச்சி, பெங்களூரில் சீனாக்காரர்கள் கந்து வட்டி தொழில் | China | NIA investigation | Trichy
திருச்சியில் தங்கியிருந்த, சீனாவை சேர்ந்த சியாவோயா மாவோ மற்றும், வு யுவான்லுான் ஆகியோரை, நவ., 13ல் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். 3 நாள் காவலில் விசாரித்தனர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்த 2 பேரை நிர்வாக இயக்குனர்களாக நியமித்து 2 நிறுவனங்களை துவக்கியதும் மொபைல் போன் செயலியை உருவாக்கி, உடனடி கடன் வழங்கியதும் தெரிய வந்தது. கடனை திருப்பி செலுத்த 7 நாள் மட்டுமே அவகாசம் கொடுத்து, 49.20 கோடி ரூபாய் வரை கந்து வட்டி வசூலித்துள்ளனர். மிரட்டி வசூலித்த தொகையை கிரிப்டோ கரன்சியாக ஹாங்காங் அனுப்பியதும் அதிர்ச்சியை கிளப்பியது.
டிச 05, 2024