உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரகசியம் காக்கும் சீனா! எச்சரிக்கும் நிபுணர்கள் | China's largest dam | Tibet | Arunachal Pradesh

ரகசியம் காக்கும் சீனா! எச்சரிக்கும் நிபுணர்கள் | China's largest dam | Tibet | Arunachal Pradesh

இது ஒரு நீர் வெடிகுண்டு! சீனா கட்டும் அணையில் இத்தனை ஆபத்தா? சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், பிரம்மபுத்திரா நதியில் பிரமாண்டமான அணையை சீனா கட்ட உள்ளது. இந்த அணையால் தாழ்வான பகுதிகளில் பாதிப்பு எதுவும் இருக்காது என சீனா கூறி வருகிறது. ஆனால் இந்த அணை ஒரு நீர் வெடிகுண்டு என அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு சமீபத்தில் கூறினார். நீரியல் நிபுணர்களும் இதை ஆமோதிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது பிரம்மபுத்திரா நதி யார்லுங் சாங்போ ஆறாக திபெத்தில் துவங்கி, நம் நாட்டின் அருணாச்சலில் சியாங் ஆறாகவும், அசாமில் பிரம்மபுத்திராவாகவும் மாறி வங்கதேசம் வழியாக வங்காள விரிகுடாவை அடைகிறது. நம் நாட்டு எல்லையிலிருந்து 50 கிமீ தொலைவில், திபெத்தில் உள்ள மெடோங் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியின் மீது இந்த மிகப்பெரும் அணை கட்டப்பட உள்ளது. அணை திட்டத்திற்காக 12 லட்சம் கோடியை சீனா செலவிடுகிறது. இந்த அணை 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதை தவிர இந்த அணை பற்றிய அனைத்து தகவல்களையும் சீனா ரகசியமாக வைத்துள்ளது.

ஜூலை 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !