மக்கள் தொகை குறைவால் பிரச்னையை சந்திக்கும் சீனா! China | Population Issues
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் 145 கோடியுடன் இந்தியா முதல் இடத்திலும் 141 கோடியுடன் சீனா 2வது இடத்திலும் உள்ளன. பல ஆண்டுகளாக சீனாதான் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தது. சில ஆண்டுக்கு முன்புதான் அந்த இடத்தை இந்தியா பிடித்தது. 1980ல் சீன அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த தம்பதிகள் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் போட்டது. அதனால் மக்கள் தொகை விகிதம் வெகுவாக குறைய ஆரம்பித்தது. எதிர்காலத்தில் வேலை செய்யக் கூடிய மக்கள் கிடைக்காமல் போய், வயதானவர்கள் அதிகம் உள்ள நாடாக சீனா மாறக்கூடாது என்பதற்காக அந்நாட்டு அரசு, 2016ல் 2 குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சட்டத்தை திருத்தியது.
ஜன 17, 2025