உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூய்மை பணி வழங்கும் நிறுவனம் மீது அடுக்கடுக்கான புகார் | Cleaning staffs | Agri Minister Djeacoumar

தூய்மை பணி வழங்கும் நிறுவனம் மீது அடுக்கடுக்கான புகார் | Cleaning staffs | Agri Minister Djeacoumar

புதுச்சேரி கிராம பகுதிகளில் எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குருமாம்பேட் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்நிறுவனத்தில் 700க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வில்லியனூரில் உள்ள வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வீட்டை முற்றுகையிட்டனர். சரியான தேதியில் முழுமையான சம்பளம் வழங்குவதில்லை. கடந்த 2 ஆண்டுகளாக மாதந்தோறும் பி.எப், இஎஸ்ஐ பணம் பிடிக்கின்றனர். ஆனால் உடல் நலக்குறைவால் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றால் சிகிச்சை அளிப்பதில்லை.

பிப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ