ஆடி மாதம் கோயிலில் ஔஷத கஞ்சி தருவது ஏன்? | Climate | Medicine | Spiritual
பொதுவாக கோடை வெயிலின் தாக்கத்தால் உடல் வலிமை குறைந்து இருக்கும். வெயிலை தொடர்ந்து தொடங்கும் பருவ மழையால் உடல் பலவீனத்தோடு சேர்ந்து காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் எளிதில் பரவும். இதனால் தான் கேரளாவில் ஆனி- ஆடி மாதங்களில் ஔஷத கஞ்சி தயாரித்து குடிக்கின்றனர். இது 20 சிறப்பு மூலிகைகள் சேர்ந்த ஆற்றல் வாய்ந்த மருத்துவ கஞ்சியாகும் ஒன்பது பருப்பு வகைகள், தானியங்களின் கலவை இது. மழைக்காலத்தில் அதிகரிக்கும் வாத கோளாறுகளை தடுக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
ஜூலை 19, 2024