எம்எல்ஏ மகாராஜன் பேச்சை கேட்டு, திமுக தலைமை கடும் அதிர்ச்சி | DMK MLA | CM Candidate | Maharajan ML
என்னை முதல்வராக்கினால், மகளிருக்கு மாத உதவித் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் தருவேன் என ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேசியது, கட்சி தலைமையை அதிர வைத்துள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதி திமுக எம்எல்ஏ மகாராஜன், சமீபத்தில், கடமயிலம் ஒன்றியத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, மகளிர் உரிமை தொகை மற்றும் கோடை கால சிறப்பு நிதி என 5,000 ரூபாயை முதல்வர் ஸ்டாலின் தந்துள்ளார். அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியோ, ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் தருவதாக சொல்கிறார். இப்போது நான் சொல்கிறேன்; என்னை முதல்வர் ஆக்கினால், உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன் என்றார். எம்எல்ஏ மகாராஜனின் இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, கட்சி தலைமைக்கு தேனி மாவட்ட திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். #DMk #DMKMLA #Andipattimaharajan #andipattimla #andipattimlamaharajan #dmkshock #cmcandidatemaharajan #exclusivenews #electionnews #tamilnaduelectionnews #tnelection2026 #tamilnaduelection