உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களை ஏமாற்றி பணம் பறிப்பு! | CM Chandrababu | Devineni Uma | AI | Crime

தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களை ஏமாற்றி பணம் பறிப்பு! | CM Chandrababu | Devineni Uma | AI | Crime

AI மூலம் ஆள் மாறாட்டம் CM போல பேசி பணம் பறிப்பு ஷாக்கில் தலைவர்கள் ஏ.ஐ மூலம் பல பலனுள்ள விசயங்கள் மக்களுக்கு கிடைக்கும் சூழலில் அதை வைத்து மோசடி செய்யும் வேலையிலும் சிலர் இறங்கி உள்ளனர். அந்த வகையில் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பெயரில் பண மோசடி சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்ற மாதம் 30ம் தேதி தெலங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களுக்கு ஒருவர் போன் செய்தார். தன்னை முன்னாள் அமைச்சர் தேவினேனி உமாவின் பிஏ என அறிமுகப்படுத்தி வீடியோ காலில் வருவதாக கூறினார். சிறிது நேரம் கழித்து வீடியோ அழைப்பு வந்தது. அதில் தேவினேனி உமா போல ஒருவர் பேசி உள்ளார். கட்சி தொண்டர் பிள்ளைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என கூறி பண உதவி கேட்டுள்ளார். மூன்று போன் நம்பரை கொடுத்து போன்பே மூலம் பணம் அனுப்ப கூறி உள்ளார். இதை உண்மை என நம்பி ஒவ்வொருவரும் 35 ஆயிரம் அனுப்பினர். இம்மாதம் 7ம் தேதி, அந்த நபர் தேவினேனி உமா போல மீண்டும் அழைத்துள்ளார். தெலங்கானா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு கட்சி சார்பில் பி. படிவம் தருவதாக அவர் உறுதியளித்தார். இதற்காக சந்திரபாபு நாயுடு உங்களிடம் பேசுவார் என்றும் கூறி உள்ளார். சந்திரபாபுவை போல தோற்றமளிக்கும் ஒருவர் வீடியோ அழைப்பில் பேசியதால் நடப்பது அனைத்தும் உண்மை என அனைவரும் நம்பினர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ளவர்கள் பெயர்களை சேகரிக்க அந்த நபர் அறிவுறுத்தினார். பின் தேவினேனி உமா போல அழைத்து சந்திரபாபுவிடம் அழைத்து சென்று கட்சி பி. படிவங்களை வாங்கி கொடுப்பதாக கூறினார். திட்டமிட்டு அவர்களை வரவழைத்து விஜயவாடாவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கும்படி தெரிவித்துள்ளார். அந்த ஓட்டலை தொடர்பு கொண்டு கட்சி தலைவர்கள் வருவதாகவும், ஆகும் செலவை தானே செலுத்துவதாகவும் கூறி உள்ளார். சத்துப்பள்ளியைச் சேர்ந்த 18 தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் புதனன்று அந்த ஓட்டலில் தங்கினர். புதன் மாலை வீடியோ காலில் வந்த அந்த நபர் சந்திரபாபுவிடம் 8 பேர் மட்டுமே செல்ல அனுமதி கிடைத்துள்ளது. முன்னதாக ஒவ்வொரு நபரும் 10,000 அனுப்ப வேண்டும் என கூறி உள்ளார். மீண்டும் மீண்டும் பணம் கேட்டதால் அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தனர் . ஓட்டல் ஊழியர்கள் பில்லை கட்டுமாறு வற்புறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தேவினேனி உமாவை தொடர்பு கொண்டனர். அவர் தான் யாருக்கும் வீடியோ கால் செய்யவில்லை என்றும் ஏற்கனவே இது போல் நடந்து தான் புகார் அளித்ததாகவும் பரபரப்பை கிளப்பினார். கால் வந்த நம்பரை டிராக் செய்து மோசடியில் ஈடுபட்டது ஏலூரு மாவட்டத்தை சேர்ந்த பார்கவ் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உண்மையை அறிந்த கம்மம் மாவட்ட தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். புகார் கொடுத்தால் பெயர் கெட்டு விடும் என கூறி அனைவரும் வீடு திரும்பினர். தலைமறைவான பார்கவ்வை போலீசார் தேடி வருகின்றனர்.

அக் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை