உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேரள முதல்வர் கான்வாய் விபத்து kerala CM| pinarayi vijayan |Cm Convoy Accident

கேரள முதல்வர் கான்வாய் விபத்து kerala CM| pinarayi vijayan |Cm Convoy Accident

கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று மாலை காரில் திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். கான்வாயில் இருந்த வகனங்களும் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. வாமனபுரம் பார்க் ஜங்ஷன் அருகே வந்தபோது, ஸ்கூட்டியில் முன்னால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் ரோட்டை கடக்க வலது பக்கமாக திரும்பினார். முதல்வரின் கான்வாயில் முன்னால் சென்று கொண்டிருந்த பைலட் வாகனம் ஸ்கூட்டி மீது மோதல் இருக்க, சடன் பிரேக் அடித்து நின்றது. இதனால், கான்வாயில் அடுத்தடுத்து வந்த 3 கார்கள், 2 ஜீப், 1 ஆம்புலன்ஸ் என 6 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி நின்றன. முதல்வர் பினராயி விஜயன் இருந்த காரும் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்வசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. கார் லேசாக சேதம் அடைந்தது. இதையடுத்து அவரது வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. விபத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !