மம்தாவை விமர்சித்த கல்லூரி மாணவன் கதி என்ன? | CM Mamata | RG Kar victim
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மம்தா அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்கத்தை தாண்டி பல்வேறு மாநிலங்களில் பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கிறது. இதனால் மம்தா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்க சைபர் கிரைம் உத்தரவிடப்பட்டுள்ளது. மம்தா அரசுக்கு எதிராக யார் பதிவிட்டாலும் உடனுக்குடன் நடவடிக்கை பாய்கிறது.