/ தினமலர் டிவி
/ பொது
/ 3000+ வீடுகள் சேதம்; 1.5 கோடி பேர் பாதிப்பு CM MK Stalin| Pm modi| fengal cyclone| relief
3000+ வீடுகள் சேதம்; 1.5 கோடி பேர் பாதிப்பு CM MK Stalin| Pm modi| fengal cyclone| relief
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தற்காலிகமாக சீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிதி ஒதுக்க கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியுள்ளதாவது: பெஞ்சல் புயல் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், ஒன்றரை கோடி பேர் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். 12 பேர் இறந்துள்ளனர். இது தவிர, வீடுகள், கால்நடைகள், பாலங்கள், குளங்கள், மின்கம்பங்கள், அங்கன்வாடி மையங்கள் பள்ளி கட்டடங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாகவும், கடிதத்தில் ஸ்டாலின் பட்டியல் இட்டு உள்ளார்
டிச 02, 2024