உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு | CM Omar Abdullah | Jammu &

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு | CM Omar Abdullah | Jammu &

ஜம்மு காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. அண்மையில் ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். வடக்கு காஷ்மீரின் சோப்பூர் சோதனை சாவடியில் நிற்காததால் லாரி டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து உமர் அப்துல்லா அமித் ஷாஷாவிடம் பேசியதாக கூறப்பட்டது. இந்த சந்திப்பு தொடர்பாக கேட்டபோது, மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுடன் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்தும் அமித்ஷாவுடன் விவாதித்ததாக கூறினார்.

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !