/ தினமலர் டிவி
/ பொது
/ அரை நூற்றாண்டு இசை பயணத்தை கொண்டாட முடிவு | CM Stalin | DMK | Music Director Ilayaraja | Special ev
அரை நூற்றாண்டு இசை பயணத்தை கொண்டாட முடிவு | CM Stalin | DMK | Music Director Ilayaraja | Special ev
தமிழ் திரையுலகில் கர்நாடக சங்கீதம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், 1976ல் வெளியான அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தமிழ் சினிமாவில் கிராமிய இசைக்கென தனி இடத்தை பெற்றுக் கொடுத்தார். தனது நீண்டகால இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். வெஸ்டர்ன் கிளாசிக்கல் எனும் மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இளையராஜா, மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசை கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி, பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். கர்நாடக சங்கீதம், ஜாஸ் என பல்வேறு இசை பாணிகளிலும் முத்திரை பதித்துள்ளார்.
மார் 13, 2025