தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட் CM Stalin |DMK MLA Gutkha Case | High Court Chennai
2017ல் அதிமுக ஆட்சியின்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்எல்ஏக்கள், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களை சட்டசபைக்குள் கொண்டு சென்றனர். தடை இருந்தும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக கூறினர். தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டசபைக்குள் கொண்டுவந்த ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிராக பேரவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க அப்போதைய சட்டசபை தலைவர் தனபால் உத்தரவிட்டார். துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் உரிமைக் குழு திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் திமுகவினர் வழக்கு தொடர்ந்தனர். உரிமை மீறல் நோட்டீசை தனி நீதிபதி ரத்துசெய்து உத்தரவிட்டார்.