உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல் முறை எம்எல்ஏக்களுக்கு முதல்வர் முக்கிய முடிவு | CM Vijay | TN Govt | Car | MLA | Assembly

முதல் முறை எம்எல்ஏக்களுக்கு முதல்வர் முக்கிய முடிவு | CM Vijay | TN Govt | Car | MLA | Assembly

முதல் முறை எம்எல்ஏக்களுக்கு முதல்வர் முக்கிய முடிவு | CM Vijay | TN Govt | Car | MLA | Assembly நடந்து முடிந்த தேர்தலில் ஏராளமானோர் முதல் முறையாக வென்று சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர். அரசியல் செல்வாக்கு ஏதுமின்றி எம்எல்ஏ ஆகியதில் பலர் தவெக கட்சியில் உள்ளவர்கள் தான். அவர்களில் சிலர் எளிமையான பின்புலத்தை கொண்டவர்கள். தொகுதி முழுதும் வலம் வர அவர்களிடம் வசதி வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசிக எம்எல்ஏ ஜோதிமணி சட்டசபையில் ஒரு கோரிக்கை வைத்தார். தொகுதி பெரிதாக இருக்கிறது, முழுதும் சென்று ஆய்வு செய்ய கார் இல்லை. அதை வாங்கும் பொருளாதார வசதியும் இல்லை. என்னை போல பலர் இங்கு இருக்கின்றனர். வசதி குறைந்த எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் உதவியாளர் அரசு செலவில் வழங்க வேண்டும் என கூறி இருந்தார். இதை கருத்தில் கொண்டு கார் வழங்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். அரசு செலவில் வழங்குவதா அல்லது சொந்த நிதியில் வழங்குவதா என ஆலோசிக்கிறார். நிதி நெருக்கடியால் அரசு செலவில் கொடுத்து விட்டு எம்எல்ஏக்களின் சம்பளத்தில் இன்ஸ்டால்மென்டில் வசூலிக்க திட்டமிடுவதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிகின்றன. #CMVijay | #TNGovt | #Car | #MLA | #Assembly | #TNMLA | #NewCar | #TVKMLA | #TNAssembly

ஆக 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ