உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை ஆர்ஏ புரத்தில் முதல்வர் விஜய்க்காக தயாராகும் அரசு பங்களா | CM Vijay | Vettri Illam | RAPuram

சென்னை ஆர்ஏ புரத்தில் முதல்வர் விஜய்க்காக தயாராகும் அரசு பங்களா | CM Vijay | Vettri Illam | RAPuram

முதல்வர் விஜய் தினமும் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து தினமும் தலைமை செயலகம் வந்து செல்கிறார். 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வீட்டுக்கு செல்லும் முன் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில், சிறிது நேரம் தங்குவார். அந்த வீட்டை முகாம் அலுவலகமாகவும் பயன்படுத்தி வருகிறார். அதிலும் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால் அரசு பங்களாவை பயன்படுத்த முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி சென்னை ஆர்ஏ புரம் பசுமை வழிச்சாலையில் உள்ள, எழில் இல்லம் முதல்வருக்காக புது பொலிவுடன் தயாராகி வருகிறது. வீட்டு வளாகத்துக்குள் உடற்பயிற்சி கூடம், பேட்மிண்டன் மைதானம், காவலர்கள் தங்கும் கூடம், நடைபாதை, புல் தரைகள் மற்றும் கூட்ட அரங்கம் உள்ளிட்டவையுடன், மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. வழக்கமாக அரசு பங்களாவை சீரமைக்கும் பணியில், பொதுப்பணித்துறை தான் ஈடுபடும். ஆனால், முதல்வர் விஜய் வசிக்கவிருக்கும் இல்லத்தை, தனியார் வாயிலாக, அவருக்கு பிடித்த வகையில் வடிமைத்து வருவதாக கூறப்படுகிறது. எனவே தான் இந்த பணிகளுக்கு டெண்டர் எதுவும் இதுவரை கோரப்படவில்லை. அதோடு, எழில் இல்லம் என்ற பெயரை வெற்றி இல்லம் எனவும் மாற்ற உள்ளனர். இல்லத்துக்கான சீரமைப்பு பணிகள் முடிந்த பின், அடுத்த மாதம் முதல்வர் விஜய், அங்கு குடியேற திட்டமிட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் அந்த வீட்டில் அமைச்சராக இருந்த தியாகராஜன் வசித்து வந்தார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வசிக்கும் குறிஞ்சி இல்லத்தில் இருந்து, நான்கு வீடுகள் தள்ளிதான் இந்த இல்லம் இருக்கிறது. முதல்வரின் வீட்டை சுற்றி, அமைச்சர்கள் நிர்மல்குமார், செங்கோட்டையன், வெங்கட்ரமணன் உள்ளிட்டோரின் இல்லங்களும் இருக்கின்றன. #GovernmentBungalow #ChiefMinisterVijay #CMLive #RAPuram #VettriIllam #TamilNadu #ChennaiNews #BungalowPreparation #PoliticsInChennai #ChiefMinisterResidence #PublicService #LocalGovernment #ChennaiPolitics #VijayInFocus #CommunityDevelopment #Infrastructure #TamilNaduGovernment #RAPuramUpdates #GovernmentProjects #CMVijay

அக் 24, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ashok Subramaniam
அக் 25, 2026 06:01

அப்போ, பட்டினப்பாக்கம் அப்பாசாமி அடுக்குமாடி குடியிருப்புக்கு எப்போதாவதுதான் வந்து செல்வாரா? அல்லது யாருக்கு தெரியாமல், தெரிவிக்காமல், வந்து செல்வாரா? குடும்பத்தோடு வெற்றி இல்லதுக்குக் குடிபுகுவாரா? அல்லது தனியாக அங்கே இருப்பாரா? கொஞ்சம் தெளிவாகச் சொல்வாரா?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை