முதல்வரின் கரூர் விசிட் காரணம் இதுதான்
கரூர் அதிமுக எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெகவில் இன்று சேர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆனந்த் பேசும்போது, வரும் 10ம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்ல இருப்பதாக அறிவித்தார். அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளார். அத்துடன், கரூர் சம்பவத்தில் இறந்தவர்கள் வீடுகளுக்கு சென்று, அவர்களின் புகைப்படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தவும், முதல்வர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார். முன்னதாக, கடந்தாண்டு செப்டம்பரில் தேர்தல் பிரசாரம் செய்ய கரூருக்கு விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரம் அழைத்துவரச்செய்து விஜய் ஆறுதல் கூறினார். தலா 20 லட்சம் இழப்பீடும் வழங்கியிருந்தார். தேர்தலுக்கு பின் நேரில் வந்து சந்திப்பதாக விஜய் உறுதி அளித்திருந்த நிலையில், முதல்வர் ஆன பின் முதல்முறையாக அவர் கரூர் செல்ல உள்ளார். #CM_Vijay #karur_visit #stampede #minister_Anand #Vijayabaskar #Tvk #bi_election #cvijayabaskar #mrvijayabaskar #tvkvijay #tamilnadu #dinamalar #TNpolitics #tamilnadunews #politicalnews #Currentaffairs #Bypolls #Breakingnews