உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போனால் அசம்பாவிதம் நடக்கலாம் - முதல்வருக்கு திடீர் எச்சரிக்கை | CM Vijay Pasumpon Visit | Intelligen

போனால் அசம்பாவிதம் நடக்கலாம் - முதல்வருக்கு திடீர் எச்சரிக்கை | CM Vijay Pasumpon Visit | Intelligen

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள, முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 30ல் குருபூஜை விழா நடக்கிறது. இதில், தமிழக முதல்வர் விஜய் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் செய்து வந்தனர். இந்த நிலையில், பசும்பொன் செல்லும் முடிவில் இருந்து முதல்வர் விஜய் பின்வாங்கி உள்ளார். அதற்கு உளவுத்துறை எச்சரிக்கையே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் விஜய் செல்லும் இடங்களில் எல்லாம், அதிகளவில் மக்கள் கூடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, போலீசார் சிரமப்படுகின்றனர். பசும்பொன்னில், ஆண்டுதோறும் தேவர் குருபூஜை நிகழ்வில், வழக்கமாக லட்சக்கணக்கில் கூட்டம் கூடும். அங்கு முதல்வர் செல்லும்போது, கூட்டம் அதிகமாகி, சிறு அசம்பாவிதம் நடந்தாலும், எதிர்க்கட்சிகள் அதனை பெரிதாக்கி அரசியல் செய்யக்கூடும். எனவே, பசும்பொன் பயணத்தை தவிர்க்குமாறு, உயர் போலீஸ் அதிகாரிகள் கோரியுள்ளனர். உளவுத்துறையும், அதே ஆலோசனையை வழங்கியது. அதை ஏற்று, பசும்பொன் பயணத்தை, முதல்வர் விஜய் தவிர்த்து விட்டார் என்கின்றனர் தவெக மூத்த நிர்வாகிகள். #Pasumpon #ThevarGurupoojai #TVKVijay #TamilNaduPolitics #TNPolitics #IntelligenceAlert #EPS #AIADMK #TNGovernment #StatePolitics #PoliticalNews #Ramnad #TamilNaduNews #CurrentAffairs #NewsUpdates

அக் 26, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
அக் 26, 2026 12:24

முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள் பழுத்த தேசியவாதி, ஆன்மீகவாதி. நாட்டின் சுதந்திரத்திற்காக பாடு பட்டவர். அவரின் பிறந்த நாளில் அவர் வாழ்ந்த ஊரில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தால்தான் அவருக்கு மரியாதை செலுத்தியதாகும் என்று கிடையாது. அவர் பிறந்த நாளில் மந்திரிகள், எம் எல் ஏக்கள் ஒரு நாளாவது மக்களுக்கு தொண்டு செய்தால், அதுவே அவருக்கு செய்யும் மரியாதை.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !