வாசகர்கள் கருத்துகள் ( 1 )
234 அசெப்பிலி மெம்ம்பெர்ஸ் ,34 மினிஸ்டர்ஸ். . ஒவ்வொரு மினொஸ்ட்டருக்கும் 25 செகிரேட்டாரி அப்பொய்ண்ட் செய்தால் சரியாக இருக்கும். மக்கள் நலம் முக்கயம்.
அமைச்சர்களின் போன் நம்பர்களை வெளியிட்டதால் சிக்கல் | CM Vijay | TN Ministers | Mobile Number Controv
இதன் ஒரு பகுதியாக, தமிழக அமைச்சர்கள், அவர்களின் உதவியாளர்கள், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஆகியோரின் மொபைல் எண்களை சமீபத்தில் அரசு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, அந்த எண்களுக்கு தினமும் ஏராளமான அழைப்புகள் வருகின்றன. இதனால் அமைச்சர்கள், அதிகாரிகள், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், அவர்களுக்குள் பேசிக் கொள்வதற்கென, தனி அலைபேசி எண்களை பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் இருந்து துறை வாரியாக வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பி.எஸ்.என்.எல். உயர் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து, புதிய எண்களை தேர்வு செய்து வழங்கி வருகிறோம். புதிதாக வழங்கப்படும் சிம் கார்டுகள் அனைத்தும், சி.யூ.ஜி. அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள், தங்களுக்குள் எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்பு கொள்ள முடியும். இந்த எண்கள் பொதுவெளியிலோ அல்லது அரசு இணையதளங்களிலோ வெளியிடப்படாது. இது முழுக்க முழுக்க உள் வட்டார நிர்வாக பயன்பாட்டிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினர். #CMVijay #TVKVijay #TVKGovt #TNMinisters #BSNL #TamilNaduPolitics #SecretMobileNumbers #TNBureaucracy #PublicCallsDisturbance #TransparencyInGovt #CMVijayOrder #NewSimCards #TNSecretariat #GovernanceTN #AdminPrivacy #MobileNumberControversy #StraitCommunication
234 அசெப்பிலி மெம்ம்பெர்ஸ் ,34 மினிஸ்டர்ஸ். . ஒவ்வொரு மினொஸ்ட்டருக்கும் 25 செகிரேட்டாரி அப்பொய்ண்ட் செய்தால் சரியாக இருக்கும். மக்கள் நலம் முக்கயம்.