உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சென்சஸ் கைகொடுக்குமா Metro rail project | Coimbatore | Madurai | CMRCL

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சென்சஸ் கைகொடுக்குமா Metro rail project | Coimbatore | Madurai | CMRCL

சென்னையை போல, கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயிலை கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டது. மதுரையில் 11,360 கோடியிலும், கோவையில் 10,740 கோடி ரூபாய் செலவிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால், குறைந்தபட்சம் அந்த நகரில் 20 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை இருக்க வேண்டும். ஆனால், கோவை, மதுரையில் அவ்வளவு மக்கள் தொகை இல்லை என்று காரணம் காட்டி திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து. திட்ட அறிக்கையில் திருத்தம் செய்து தமிழக அரசு அனுப்பியது. மீண்டும் அதே காரணத்தை சுட்டிக்காட்டி மத்திய அரசு நிராகரித்தது. மெட்ரோ ரயிலுக்கு பதிலாக பஸ் போக்குவரத்தை அதிகப்படுத்தவும் யோசனை தெரிவித்து இருந்தது.

ஆக 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை