உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீபாவளி முன்பதிவு; சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட் | IRCTC | Railway

தீபாவளி முன்பதிவு; சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட் | IRCTC | Railway

இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நிலையில், தற்போது 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அதன்படி, நவம்பர் 5ம் தேதி பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. அதேசமயம், லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முயன்றதால் IRCTC இணையதளம் முடங்கியது. இதனால் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் அவதி அடைந்தனர்.

செப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ