/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ! | Madurai | Madurai Theater Fire | Madurai Fire
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ! | Madurai | Madurai Theater Fire | Madurai Fire
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் அருகே பழமையான சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து மதுரை மீனாட்சி கோயில் மேற்கு கோபுரம் அருகே அமைந்துள்ளது பழைய சென்ட்ரல் தியேட்டர். இங்கு கொரோனா காலத்தில் படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. வட மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் மற்றும் கார் பார்க்கிங் ஆக செயல்பட்டு வந்தது. இந்த சூழலில் இன்று மாலை திடீரென தியேட்டர் வளாகத்தில் தீப்பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் மளமளவென பரவி அதிகளவில் புகை வெளியேறியது.
செப் 11, 2026