உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உருவானது புயல் சின்னம் - இன்று எங்கெல்லாம் கனமழை கொட்டும்? | Heavy Rain Warning | Chennai

உருவானது புயல் சின்னம் - இன்று எங்கெல்லாம் கனமழை கொட்டும்? | Heavy Rain Warning | Chennai

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அது செவ்வாயன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். வருகிற 23ம் தேதி காலை அது வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை நெருங்கும்.

செப் 21, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Maries
செப் 21, 2026 12:36

நீங்கள் எப்பொழுதெல்லாம் மழை பொழியும் என்று கூறுகிறீர்களா அன்று மழை பெய்யாது. வெயில் வாட்டி வதைக்கும். நீங்க தயவுசெய்து வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தாலே மழை தானாக பெய்யும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !