உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேல்மங்கலம் போலீசார் உடலை மீட்டு விசாரணை | Theni | Theni Police | Students | Investigation

மேல்மங்கலம் போலீசார் உடலை மீட்டு விசாரணை | Theni | Theni Police | Students | Investigation

தேனி பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் கீழத்தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் மகன் மிதுன் சத்யா, முத்தையா மகன் பாலு தர்ஷன் இருவருக்கும் வயது 14. ஏழாம் வகுப்பு படித்து வந்தனர். ​இன்று வார விடுமுறையை ஒட்டி இருவரும் வராக நதி ஆற்றில் குளிக்க சென்றனர். ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர். அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் உடனடியாக சத்தமிட்டு அருகிலிருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்தனர். தோட்டங்களில் பணியில் இருந்த விவசாயிகள் ஓடி வந்து இரண்டு சிறுவர்களையும் மீட்டனர்.

நவ 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை