/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை வந்த இண்டிகோ விமானத்துக்கு மிரட்டல்! | Chennai-bound IndiGo flight | Bomb Threat | Chennai
சென்னை வந்த இண்டிகோ விமானத்துக்கு மிரட்டல்! | Chennai-bound IndiGo flight | Bomb Threat | Chennai
ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் ஒன்று இன்று பகல் வந்து கொண்டிருந்தது. 192 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 198 பேர் பயணித்தனர். விமானத்தின் கழிவறை ஜன்னலில் விமானப் பணியாளர் ஒரு காகிதத்தை கண்டெடுத்தார். அதில் 1.50க்கு குண்டு வெடிக்கும் என எழுதப்பட்டு இருந்தது. உடனே விமானிக்கு தகவல் கொடுத்து நடுவானில் அனைவரும் அலர்ட் செய்யப்பட்டனர். சென்னையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பயணிகளின் உடைமை மற்றும் விமானத்தில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவினர் தீவிர சோதனை செய்தனர்.
நவ 13, 2026