/ தினமலர் டிவி
/ பொது
/ ரவுடி தோட்டம் சேகரின் மகன் அழகுராஜா மீண்டும் சரண் | Surrender | Egmore Court | Investigation
ரவுடி தோட்டம் சேகரின் மகன் அழகுராஜா மீண்டும் சரண் | Surrender | Egmore Court | Investigation
சென்னை திருவல்லிக்கேணி ஜாம் பஜார் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் 1990களின் இறுதியில் பெரும் தாதாவாக வலம் வந்தவர் தோட்டம் சேகர். 2001ல் இவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தன் தந்தையின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக 20 ஆண்டுகள் கழித்து மயிலை சிவக்குமாரை தோட்டம் சேகரின் மகன் அழகுராஜா தீர்த்து கட்டினார். இதுதவிர கொலை கொலை முயற்சி ஆள்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் அழகுராஜா மீது நிலுவையில் உள்ளன. அழகு ராஜாவை தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடி வந்தனர். போன ஆண்டு டிசம்பரில் கோர்ட்டில் சரணடைந்தார்.
நவ 17, 2026