உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக முதலாளிகளுக்கான கட்சி: லாக்கப் மரணத்துக்கு பதில் என்ன? CMP Shanmugam | Vijay TVK| 2026 Electio

திமுக முதலாளிகளுக்கான கட்சி: லாக்கப் மரணத்துக்கு பதில் என்ன? CMP Shanmugam | Vijay TVK| 2026 Electio

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது - வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்கிறீர்கள். அது, மற்ற கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுக்குமோ அதை பொறுத்துத் தான் இருக்கும். நடிகர் விஜயின் திட்டமும் இதில் அடங்கும். அவருக்கு கூடுகின்ற கூட்டம் ஓட்டாக மாறுமா, இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. அதிமுக-பாஜ கூட்டணியில் பாமக சேர்ந்தால் கூட, அது திமுகவுக்கு சவாலாக இருக்காது. அதே சமயம், அதிமுக தலைமை வகிக்கும் கூட்டணியில் விஜய் சேர்ந்தால் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும். கடந்த முறை 6 தொகுதியில் போட்டியிட்டோம். இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது பற்றி விவாதித்து முடிவெடுப்போம். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலத்தில் இருந்தே திமுக, முதலாளிகளின் விருப்பங்களை பாதுகாக்கும் கட்சியாக இருந்து வருகிறது. இதுதான் எங்கள் பார்வை. அக்கட்சியின் அடிப்படையான குணாதிசயம் எந்த விதத்திலும் மாறவில்லை.

ஜூலை 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ